Tuesday, September 29, 2020

பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்.பி.பி

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 25ஆம் திகதி காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.


எஸ்.பி.பி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.குறிப்பாக அவர் சங்கராச்சாரியார் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.

இந்த நிலையில் எஸ்.பி.பி யின் மறைவு குறித்து சங்கரமடம் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் சங்கர மடத்தில் உள்ள சங்கராச்சாரியார்கள் மீது எஸ்.பி.பி ஆழ்ந்த பக்தியும் மரியாதையும் வைத்திருந்தார் என்றும் கடந்த பெப்ரவரி மாதம் நெல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டை வேதபாடசாலை தொடங்குவதற்காக சங்கர மடத்திற்கு அவர் தானமாக எழுதி கொடுத்து தனது பக்தியை வெளிப்படுத்தி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த தகவல் எஸ்.பி.பி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!