ஐ.தே.க வின் பிரதி தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு


ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக கட்சியின் பிரதி செயலாளர் ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவருடன் குறித்த பதவிக்காக கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க போட்டியிட்டிருந்தார். 

இதன்போது வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தனவிற்கு 28 வாக்குகளுகம் ரவி கருணாநாயக்கவிற்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.