வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்


நாளை முதல் அனைத்து அரச பாடசாலைகளினதும் தரம் 6 முதல் 13 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் வழமை போன்று பாடசாலை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான பாடசாலைகள் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது .