பேசாலை விசேட புலனாய்வு துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மன்னார் பிரதேசச் செயலகப் பிரிவிலுள்ள பெரிய கரிசல் பகுதியில் மகேந்திரா ரக வாகனம் ஒன்றில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூடைகள் பதுக்கிவைக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (26) மாலை பேசாலை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.
சுமார் 1024 கிலோ 200 கிராம் மஞ்சள் மூட்டைகள் இவ்வாறு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் யாரும் இல்லாத நிலையில் பெரிய கரிசல் பகுதியில் லொறி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூட்டைகள் பேசாலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த மஞ்சள் இந்தியாவிலிருந்து கடத்தல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
மேலும் பேசாலை பொலிஸாரினால் ஒரு மாதத்தில் மூன்று மஞ்சள் கடத்தல் சம்பவங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.