Monday, September 28, 2020

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்-மஹிந்த தேசப்பிரிய

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


அரசியல்வாதிகளும் மனிதர்கள் என்று நானே கூறுகிறேன் இலங்கையில் வேறு எவரும் இதனை கூறி கேட்டதில்லை அரசியல்வாதிகளும் எமது சமூகத்தில் ஒரு அங்கம்.

நாம் சமூகத்தை கருப்பாக வைத்துக்கொண்டு தங்கத்தால் செய்த,வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட பாலில் நீராட்டிய அரசியல்வாதிகளை தேடமுடியாது.

 எமக்கு ஜனநாயக சமூகம் அவசியம் என்றால் அமைச்சர் நாமல் ராஜபக்ச கூறியதுபோல் ஜனநாயகத்தின் ஊடாக எதனையும் செய்ய கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும்.

 அப்படியான சுதந்திரம் கிடைப்பதில்லை. ஜனநாயகம் என்பது மற்றவர்களை மதித்து அவர்களின் கருத்துக்கு இடம் அளிப்பது. இதனை தவிர வேறு எதுவும் இல்லை.

 அரசு அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டுமாயின் கருத்துக்களை பெற வேண்டுமென நான்கு இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது குறித்து மகிழ்ச்சி.

 78ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது மக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை.

 தற்போது நான் 20ஆவது குறித்தோ 19 ஆவது திருத்தச்சட்டம் குறித்தோ பேசப்போவதில்லை. நான் தற்போது ஆணைக்குழுவில் இருக்கிறேன்.

சிறந்த அரசியலமைப்புச்சட்டம் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!