பாலியல் இலஞ்சம் கோரிய உப போலிஸ் பரிசோதகருக்கு நேர்ந்த கதி!


பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நிலையில் கைது செய்யப்பட்ட 59 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஹொரணை போலிஸில் பணிபுரிந்த உப பொலிஸ் பரிசோதகர் கே.சுனில் பெரேரா என்ற நபர் நேற்று (08) சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, குறித்த சந்தேகநபர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக இலஞ்ச ஆணைக்குழுவால் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காணாமல் போன மோட்டார் சைக்கிள் ஒன்று தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த பெண்ணிடம் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.