கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
சீன நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தொற்று நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தமை பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பியமை மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
108 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சீனாவுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சீனா,இலங்கை,தென்கொரியா,ஆஸ்திரே லியா,தாய்லாந்து வியட்நாம்,கம்போடியா மற்றும் கானா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.