சீன உணவகமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 29 பேர் பலி

வட சீனாவின் ஷங்ஸி மாகாணத்திலுள்ள உணவகமொன்று தகர்ந்ததில் 29 பேர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் மோசமாகக் காயமடைந்ததாக சீனாவின் அவசரநிலை அமைச்சு ஊடகம் நேற்றுத் தெரிவித்துள்ளது.

ஷங்ஸிக்கு தென்மேற்காகவுள்ள ஸியாங்ஃபென் கவுண்டியில் கட்டிடமானது கடந்த சனிக்கிழமை இலங்கை நேரப்படி காலை 7.10க்குத் தகர்ந்ததாக அறிக்கையொன்றில் அவசரநிலை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

கிராமவாசிகளும், உறவினர்களும் பிறந்தநாள் கொண்டாட்டமொன்றுக்காக கூடியிருந்தபோது குறித்த இரண்டு மாடிக் கட்டிடமானது தகர்ந்ததுடன், மீட்புப் பணியானது நேற்று அதிகாலையில் முடிவுக்கு வந்ததாக சீன அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சிதைவுகளிலிருந்து 47 பேர் மீட்கப்பட்ட நிலையில் 29 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதுடன், 21 பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.