1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் ஆரம்பம்


நாட்டில் உள்ள ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்க உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியிலாளர் நிஹால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்

இத் திட்டத்திற்கு 'நீர்ப்பாசன சுபீட்சம்' என பெயரிடப்பட்டுள்ளதுடன் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் அமைச்சர்களை உள்ளடக்கிய செயலணி ஒன்று இதற்காக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.