மண்சரிவு முன் எச்சரிக்கை!


சற்றுமுன்னர் காலி மாவட்டத்தின் நியகம மற்றும் எல்பிட்டிய பகுதிகளிலும், களுத்துறை மாவட்டத்தின் வலல்லவிட பகுதிக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

மண்சரிவு முன்னெச்சரிக்கை காலப்பகுதியில் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவும்.

1. நிலத்தில் வெடிப்பு உருவாகுதல், ஆழமாகும் வெடிப்புகள் மற்றும் தரை உள்ளிறக்கங்கள்.

2. மரங்கள், மின் கம்பங்கள், வேலிகள், மற்றும் தொலைபேசி கம்பங்கள் சாய்வடைதல்.

3. சாய்வான பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்களின் தரை மற்றும் சுவர்களில் வெடிப்புகள் உருவாகுதல்.

4. நிலத்திலிருந்து திடீரென நீரூற்றுகள், சேற்று நீர் தோன்றுதல் மற்றும் தற்போதுள்ள நீரூற்றுகள் தடைபடுதல் அல்லது இல்லாது போகுதல்.