Thursday, September 24, 2020

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக இதுவரை ஆறு வழக்குகள் தாக்கல்

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


நேற்றைய தினம் ஒரு மனுவும் இன்றைய தினம் ஐந்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் தற்போது அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்ப்பை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அம்மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் பா.உ.ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் சில சரத்துக்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி இந்திக காலகே, அணில் காரியவசம், இலங்கை நியாய முன்னணியின் செயலாளர் நாகாநந்த கொடிதுவக்கு, மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!