இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இராணுவமே மேற்கொள்ளும் என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.
தற்போது மெட்ரோ
பொலிட்டன் கம்பனியே சாரதி
அனுமதிப்பத்திரத்தை அச்சிடுகின்றது.
மேற்படி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் மீது
கணக்காய்வு திணைக்களம் நடத்திய விசாரணையில் மில்லியன் கணக்கான பாரிய
இழப்பு
நாட்டுக்கு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது
குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே
அவர்
இதனை
தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு டிசம்பர் மாதம்
31ஆம்
திகதியுடன் மெட்ரோ
பொலிட்டன் கம்பனியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வருகின்றது.
எனவே
எதிர்வரும் 2021ஆம்
ஆண்டு
முதல்
சாரதி
அனுமதிப்பத்திரங்களை நியாயமான செலவில் அச்சிடும் பணியை
இராணுவத்தினரை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.