Sunday, September 20, 2020

கண்டி பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட மூவர் பலி.


கண்டி-பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதால் குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஒன்றரை மாத குழந்தை ஒன்று உள்ளிட்ட மூவர் அனர்த்த மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

இதன்போது கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த தம்பதியினரும் இன்று பகல் 2 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!