கொழும்பு நகரத்துக்குள் நாளை முதல் நுழையும் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் இடது பாதை அல்லது பஸ் முன்னுரிமை பாதையைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கொழும்பு நகரத்துக்குள் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சோதனை நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படவுள்ளது.
நேற்று (14) முதல் பஸ் முன்னுரிமை பாதை முறை மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது.
இதேவேளை, அதிகளவான முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வீதி விதிமுறைகளை கடைபிடிப்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.