காலநிலையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 10 மில்லியன் ரூபாய் நிவாரண நிதி ஒதுக்கீடு


சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 21 மாவட்டங்களில் 1000 இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக பத்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்று மாவட்டங்களுக்கு துரித நிவாரணம் வழங்குவதற்காக 15 இலட்சம் ரூபாவை அரசாங்கம் வழங்கியிருப்பதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்தியநிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சாவித்திரி ஜயகொடி தெரிவித்துள்ளார்.