புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை


கீழ் மட்டத்திலிருந்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் உடனடி பெறுபேறுகளைப் பெறவேண்டியது அவசியமானது என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களிடம் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து துறைகளிலுமான பணிகள் கீழ் மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இப்போது தேவையாக இருப்பது மக்களுக்கு உடனடி பெறுபேறுகளை வழங்குவதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் முக்கியத்துவம் அளித்து இராஜாங்க அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலக்குகளை அடைந்துகொள்வதில் செயலாளர்களுக்கு முக்கிய பொறுப்பும் பணிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதனால், மக்கள் மத்தியில் சென்று பிரச்சினைகளை தீர்த்து சவால்களை வெற்றிகொள்வதற்காக செயற்பட வேண்டும் என புதிய இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை கொடுத்துள்ளார்.

கடந்த வாரம், ஐனாதிபதி செயலகத்தில் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வின் போதே இதனை அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நியமனங்களை பெற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களின் விபரங்கள் பின்வருமாறு,

01. திரு. டி. பி. ஜி. குமாரசிறி
— தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்

02. திரு. எஸ். டி. ஏ. பி. பொரலஸ்ஸ
— காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச வியாபார காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி

03.திரு. கே. டி. எஸ். ருவன்சந்திர
— கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு

04. திரு. எம். என். ரணசிங்க
— பசளை உற்பத்தி மற்றும் விநியோகங்கள், இரசாயண பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல்

05. திரு. எஸ். ரி. கொடிகார
— தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள்

06. திரு. என். எச். எம். சித்ரானந்த
— திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல்

07. திரு. எச். கே. டி. டப்ளியு. எம். என். பி. ஹப்புஹின்ன
— சமுர்த்தி, மனைப் பொருளாதார, நுண்நிதி, சுயதொழில், தொழில் அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு அரச வளங்கள் அபிவிருத்தி

08. திரு. திஸ்ஸ ஹேவாவித்தான
— தென்னை, கித்துள், பனை மற்றும் இறப்பர் செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த பொறிமுறை பண்டங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல்

09. திரு. எம். தேவசுரேந்திர
— விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி

10. திரு. எம். ஏ. பி. வி. பண்டாரநாயக்க
— பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள் , மரப்பாண்டங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாடு

11. திரு. எஸ். எச். ஹரிஸ்சந்திர
— அறநெறிப் பாடசாலைகள், பிக்குமார் கல்வி, பிரிவெனாக்கள் மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள்

12. திரு. எஸ். அருமைநாயகம்
— வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்

13. திரு. எஸ். ஜி. விஜயபந்து
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் நீர்வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி

14. திரு. எஸ். சேனாநாயக்க
— கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள்

15. திரு. ஏ. சேனாநாயக்க
— தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகவியலாளர்கள் தொழில் அபிவிருத்தி

16. திரு. ஜி. சி. கருணாரத்ன
— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு

17. திரு. கே. எச் .டி. கே. சமரக்கோன்
— சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி

18. திரு. டி. டி. மாத்தர ஆரச்சி
— களஞ்சிய வசதிகள், கொல்களன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி

19. பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க
— கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்

20. திருமதி. ஏ. கே. டப்ளியு. டப்ளியு. எம். என். கே. வீரசேகர
— சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமுதாய சுகாதாரம்

21. திருமதி. ஆர். சுனேத்ரா குணவர்தன
— பத்திக், கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள்

22. திருமதி. கே. எம். எஸ். டி. ஜயசேகர
— மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள்

23. திரு. டப்ளியு. பி. பலுகஸ்வெவ
— மகாவலி வலயங்கள் சார்ந்த அகழிகள், வாய்க்கால்கள் மற்றும் வாழ்விடங்கள் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

24. திரு. டி. எல். பி. ஆர். அபயரத்ன
— கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பயிர்ச்செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு

25. திரு. கே. ஆர். உடுவாவல
— மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்

26. திரு. ஜே. எம். திலகரத்ன பண்டா
— கம்பனித் தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலைத் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு

27. திரு. எல். எல். ஏ. விஜேசிறி
— நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்ப கமத்தொழில்

28. திரு. ஆர். எம். ஏ. ரத்னாயக்க
— நிதி மற்றும் மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி சீர்திருத்தம்

29. திரு. டி. டி. ஆரியரத்ன
— கிராமிய வயல்கள் சார்ந்த குளங்கள், நீர்த்தேங்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி

30. திரு. கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன
— கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள்கள் தொழில் மேம்பாட்டு

31. திரு. எஸ். எம். டி. எல். கே. த அல்விஸ்
— வாகனங்களை ஒழுங்குபடுத்தல்,பேருந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில்

32. கலாநிதி உபாலி சேதர
— கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு
 
33. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) டப்ளியு. பி. பி. பெர்ணான்டோ
— வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகைகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி

34. திரு. ஜயந்த சந்திரசோம
— அழகு மீன்கள், நன்னீர் மீன்கள் மற்றும் இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி, ஆழ்கடல் பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி

35. திரு.கே. எச். ரவீந்திர சமரவிக்கிரம
— கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு.