அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
விரைவில் புதிய அரசியல் யாப்பினை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ள நிலையில் இரண்டு தடவைகள் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லுவது பொதுமக்களின் பணத்தை நாசம் செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் முடிவுகளை வெளியிடும் ஊடக சந்திப்பில் அவர் இன்று (29) இதனை கூறியுள்ளார்.