Sunday, September 20, 2020

புதிய போக்குவரத்து நடைமுறை மீண்டும் நாளை முதல்.....


கொழும்பில் சில பகுதிகளில் நாளை முதல் மீண்டும் பஸ் முன்னுரிமை திட்டம் அமல்படுத்தப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் சாரதிகளை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இதற்கான விசேட பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் சிறந்த வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பஸ் முன்னுரிமை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் நாளை முதல் மீண்டும் இத்திட்டத்தை அமல்படுத்த படுவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .

இதற்கமைய கொழும்பு நகரின் நான்கு வீதிகள் மையப்படுத்தி பஸ் முன்னுரிமை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது இதனிடையே நாளை முதல் மீண்டும் அமல்படுத்த முன்னுரிமை திட்டத்தை மீறி செயற்படும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார் 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!