தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பம்கோரல்

2018ஆம் ஆண்டு .பொ.. உயர்தர முடிவுகளின் பிரகாரம் 2020ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சியாளர்களை உள்வாங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது.

 ஒன்லைன் முறை மூலம் மட்டுமே தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை விண்ணப்பிக்க முடியும். அதன்படி கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.moe.gov.lk பார்வையிட்டு தொடர்புடைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி திகதி செப்டம்பர் 25ஆகும்.

 ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக அலுவலக நேரங்களில் 0112787303/ 0112787385/ 0112787393/ 0112787399/ 0112787444 என்ற தொலைபேசி எண்களுக்கு அழைப்பதன் மூலமும்ncoe_application@moe.gov.lk என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலமும் உதவிகளை கோரலாம்.

 இலங்கையில் உள்ள 19 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 50 கற்கைகளுக்கு 4253 மாணவர்கள் இம்முறை இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.