அவர்களது கோரிக்கையைச் செயற்படுத்தும் விதமாக லங்காகம பகுதிக்கு ஶ்ரீ லங்கா ரெலிகொம் (SLT) நிறுவனம் இணைய வசதிகளை வழங்கியதுடன், கா / நெலு / லங்காகம கனிஷ்ட பாடசாலையில் மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தவும் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளது.
இந்த செயற்பாட்டைத் தொடக்கி வைப்பதற்கான அடையாளமாக நேற்று, ஶ்ரீ லங்கா ரெலிகொம் (SLT) நிறுவனத்தின் தலைவர் திரு. ரொஹான் பெர்னாண்டோ, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் திரு. ஓஷத சேனநாயக்க மற்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.லலித் செனவிரத்ன ஆகியோர் ஷும் ((ZOOM) செயலி தொழில்நுட்பத்தின் வழியாக லங்காகம கனிஷ்ட பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடியுள்ளனர்.
மிகவும் குறுகிய காலத்தில் - கல்வி கற்கும் இந்த குழந்தைகள் உலகத்துடன் இணைவதற்கான ஒரு அடித்தளமாக இணைய வசதிகளை வழங்கிய ஶ்ரீ லங்கா ரெலிகொம் (SLT) நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.