"சட்டம் எவ்வாறானதாக ஆக்கப்பட்டிருந்தாலும், அரசமைப்பு எப்படியானதாக உருவாக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் சரியானதைச் செய்கின்றீர்கள் எனின், அதற்கான முடிவுகளைத் துணிந்து எடுக்க அச்சமடைய வேண்டாம்.நேர்மையான ஒரு முடிவு ஒருபோதுமே தவறாகப் போய் முடிந்துவிட முடியாது" என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அமைச்சுக்களி
மேலும் அவர் தெரிவிக்கையில், ஓர் அமைச்சின் செயலாளராக நெருக்கடியான ஒரு சூழ்நிலையில், எமது நாட்டிற்கான சரியான முடிவுகளை தான் தற்துணிவோடு எடுத்திருந்ததாகவும் பின்னர் அவர் அதற்காக நீதிமன்றம் வரை கூட கொண்டுசெல்லப்பட்டதாகவும் ஆனால் இப்போது, இறுதியாக, தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவே ஆகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் சரியான முடிவுகளை நாம் எடுத்தால், எமது இலக்குகள் தவறிவிடுவதில்லை அதுவே இயற்கையானதும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தவறான முடிவுகளை எடுப்பதுவே, தொடர்ச்சியான தவறுகளுக்கு வழிவகுத்துவிடும் எனவும் உரிய தருணங்களில், சரியான முடிவுகளை தயக்கமின்றி துணிந்து எடுப்பவர்களுக்கு தனது முழு ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களுக்குச் சரியானதை நேர்மையாக மனச்சாட்சிக்கு விரோதமின்றி செய்ய வேண்டும் எனவும் கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் பொருட்டு இப்போது உரிய முடிவுகளைத் தற்துணிவோடு எடுத்ததையிட்டு பின்பொரு நாளில், நிச்சயமாக நாம் பெருமை கொள்வோம் எனவும் அதற்கு அவரே உதாரணமாக திகழ்வதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.