சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் கைது


அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் உள்ள இலங்கையர் ஒருவர் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 

12 முதல் 14 வயதுடைய சிறு பெண் பிள்ளைகளிடம் தவறான புகைப்படம் பெற்றுக் கொள்வதோடு மேலும் பல புகைப்படங்களை அனுப்புமாறு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது தனக்கு கட்டுப்படாத சிறுவர்களை தண்டிக்கும் வகையில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் குறித்த நபர் அனுப்பியுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

23 வயதுடைய இலங்கை இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

போலி சமூக வலைத்தள பக்கங்கள் பயன்படுத்தி பிரித்தானியாவில் உள்ள சிறுமியுடனும் அமெரிக்காவில் உள்ள சிறுமியுடனும் குறித்த நபர் தொடர்பில் இருந்துள்ளார். பொலிஸார் குறித்த நபரின் அறையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.