Friday, September 25, 2020

மேலதிக வகுப்புக்களை நடத்த தடை

க.பொ.த உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் 12 முதல் 2020 நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11ம் திகதி நடைபெற உள்ளது.

எனவே 2020 க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பாக 2020.10.06 நள்ளிரவு 12 முதல் பரீட்சை முழுமையாக முடிவடையும் வரையும்,ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக 2020.10.07 நள்ளிரவு 12 முதல் பரீட்சை முடிவடையும் வரை பரிட்சை விண்ணப்பதாரர்களுக்கு மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்வது மற்றும் நடத்துவது,பாட விடயம் தொடர்பாக விரிவுரைகள், போதனைகள்,வேலைத்திட்டங்கள் நடாத்துவது மேற்படி பரீட்சை தொடர்பாக எதிர்பார்க்கை வினாக்கள் அச்சிடுவது பகிர்வது பரீட்சை வினாத்தாள்களை பெற்றுத்தருவதாக அல்லது அதற்கு இணையாக வினாக்களை பெற்றுத்தருவதாக போஸ்டர், பேனர்,துண்டு பிரசுரங்கள் அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் ஊடகம் பிரசாரம் செய்வது அவ்வாறானவற்றை வைத்திருப்பது முழுமையாக தடை செய்யப்படுகிறது.

மேற்படி நிகழ்வுகள் நடைபெறுமிடத்து முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தொடர்பு இலக்கங்கள்

பொலீஸ் அலுவலகம்-  011-2421111
பொலிஸ் அவசர தொடர்பு நிலையம்- 119
பரீட்சைத் திணைக்களத்தின் உடனடி அழைப்பு -1911
பரீட்சை ஆணையாளர் நாயகம்- 011-2 2785 211/011-2785 212
பாடசாலை பரீட்சை பெறுபேறு கிளை- 011-2784 208/ 011-2784 537

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!