Tuesday, September 15, 2020

ஹற்றனில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இருசக்கர வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலி


நானு-ஓயா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பங்களாவத்தை வெண்டிக்கோனர் முதலாம் முடக்கு பகுதியில், இன்று (15) இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

நோர்வூட் தோட்டம் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த செல்வராஜ் பிரேம்சதீஸ் என்ற 24 வயதுடைய இளைஞனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நோர்வூட் பகுதியில் இருந்து நுவரெலியாவை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.




சம்பவ இடத்தில் பலியான இளைஞனின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.மேலும் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!