இந்தியாவில் கொரோனா புதுமுடக்க காலத்தில் பாரியளவு இணையவழி குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார் .கேரள காவல்துறை மற்றும் சைபர் ஸ்பேஸ் மற்றும் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் நடத்திய தரவு தனியுரிமை மற்றும் ஹேக்கிங் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது இதில் இணைய பாதுகாப்பு எனும் தலைப்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கலந்துகொண்டு பேசினார்.
கொரோனா தொற்றுநோய் தொடர்ந்து நிதி மோசடிகள் அதிக வேகமாக அதிகரித்துள்ளது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார் .
குறைந்த அளவிலான விழிப்புணர்வு மற்றும் இணைய பாதுகாப்பு குறைபாடு காரணமாக இணையவழிக் குற்றங்களில் பாரிய அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இணைய கட்டணங்களில் பணத்தை கையாளுதல் தொடர்பாக அதிக அளவிலான முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் இணையத்தில் இருக்கும்போது பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்தார்.
இணையத்தை பயன்படுத்தும் போது ஒரு பொறுப்பான அணுகுமுறை இருக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.