Wednesday, September 16, 2020

முதன் முறையாக காணொளி மூலம் ஐ.நா. பொதுக்கூட்டம்


கொரோனா நெருக்கடி காரணமாக ஐ.நா. பொதுச் சபையின் 75 ஆவது கூட்டம் காணொளி முறையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

அந்த அமைப்பின் வரலாற்றில், உலகத் தலைவா்கள் நேரடியாக கலந்து கொள்ளாமல் காணொளி மூலம் நடைபெறும் முதல் பொதுச் சபைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தக் கூட்டத்தில், உலகத் தலைவா்கள் அனைவரும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே காணொளி முறையில் பங்கேற்றனா். கொரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக, அவா்கள் நேரடியாக நியூயோர்க் வருவது தவிா்க்கப்பட்டுள்ளது. தலைவா்கள் முன்கூட்டியே பதிவு செய்த உரைகள், இந்த பொதுச் சபையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. 

பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் 75 ஆவது ஆண்டு விழா வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. இதற்கான உயா்நிலைக் கூட்டத்திலும் தலைவா்கள் காணொளி மூலம் பங்கேற்பாா்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!