Tuesday, September 29, 2020

இலங்கைக்குள் பசு வதையை தடுப்பதற்கு பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

இதற்கமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாடுகளைக் கொல்வதை தடுப்பதற்கான பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


எனினும் நுகர்வோருக்கு தேவையான மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கும் அதனை நிவாரண விலையில் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவையின் தீர்மானங்கள் முறையே

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பெரியதாகும்.

பசுவதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையான அன்னிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக் கூடிய வகையில் உள்ளூர் பசும்பால் தொழில்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழில் துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கவனத்திற்கொண்டு பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பசுவதை தொடர்பில் தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள 1958ஆம் ஆண்டு இலக்கம் 29 கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் ஒன்பதின் கீழான அல்லது கொலை கட்டளைச் சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

பசு இறைச்சியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் நாட்டில் பசுவதையைத் தடை செய்தல்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!