Monday, September 21, 2020

கோத்தபயவின் அடுத்த நகர்வு!அமைச்சுக்களில் அதிரடி மாற்றம்.

அமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் விடயதானங்களில் சிலவற்றை இராஜாங்க அமைச்சுக்களுக்கு பகிர உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை இராஜாங்க அமைச்சுக்களின் பெயர்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது.

இந்த மாற்றங்கள் அடுத்த வாரமளவில் இடம்பெறலாம் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!