விளையாட்டு துறையில் தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை தம்வசப்படுத்திக் கொள்ளும் திறமை கொண்ட வீர வீராங்கனைகளை உருவாக்குவதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் வழிகாட்டலில் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
இதற்கமைய கல்வி அமைச்சர், கல்வியமைச்சின் அதிகாரிகள், பாடசாலை விளையாட்டு அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர்களுடனான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது நாட்டில் உள்ள 25 விளையாட்டு பாடசாலைகளையும் மறுசீரமைத்து, மேம்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை தம்வசப்படுத்திக் கொள்ளும் திறமை கொண்ட வீர வீராங்கனைகளை உருவாக்குவதற்கு அவசியமான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.