பாதாளக்குழுவைச் சேர்ந்த நால்வர், வந்துராமுல்ல வனப் பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவர்களிடமிருந்து கைக்குண்டுகள், கூரான ஆயுதங்கள், போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதென, நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், இவர்கள் கப்பம் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.