ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த எவருக்கும் தேசிய பட்டியலில் இடமில்லை என்று அக்கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் களத்துக்கு முதல் அடி எடுத்து வைக்கும்போதே வலுவான அணியாக ஐக்கிய மக்கள் சக்தியால் உருவெடுக்க முடிந்துள்ளதென தெரிவித்த அவர், பொதுஜன பெரமுனவிற்கு உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் உருவெடுத்துள்ளது இரண்டு வருடங்கள் சென்றதெனவும் தெரிவித்தார்.
சுற்றிவளைத்து கல்லெறியும் போது வலுவான ஒரு ஆரம்பத்தை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்துள்தெனவும் நாட்டு மக்களுக்கு தேர்தல் களத்தில் இருக்கின்றன ஒரேயொரு மாற்று சக்தியாக அக்கட்சி மட்டுமே உள்ளதெனவும் தெரிவித்தார்.