Monday, August 24, 2020

இலங்கையில் 12 ஆவது கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (22) நள்ளிரவு உயிரிழந்ததாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, இலங்கையில் இதுவரை 12 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

குறித்த பெண்ணிற்கு புற்றுநோய் மற்றும் இருதய நோய் அறிகுறிகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இலங்கையில் இதுவரை 2947 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2798 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!