பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் தத்தமது வாக்கை அடையாளமிடுவதற்கு அவசியப்படும் பேனையை தனித்தனியாக அவர்களே எடுத்துச்செல்ல வேண்டும்.
அப்பேனை நீலம் அல்லது கருப்பு நிற குமிழ் முனைப் பேனையாக இருப்பதுடன் ஏதேனும் ஒரு கட்சியையோ அல்லது வேட்பாளரையோ ஊக்குவிக்கும் வகையிலான எந்தவொரு அடையாளமோ, நிறமோ, இலச்சினையோ அதில் இருத்தலாகாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.