Wednesday, August 5, 2020

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று


பிரபல தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனைத்தொடர்ந்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில் தனக்கு சில அறிகுறிகள் தென்பட்டதையடுத்து தான் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதாகவும் இதன்போது கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தன்னுடைய அறக்கட்டளை சார்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!