Thursday, August 13, 2020

ராஜாங்கனை பிரதேசப் பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவருக்கு கோவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ராஜாங்கனை பிரதேசப் பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவருக்கு கோவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.நேற்று மாலை இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜாங்கன பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சந்தியா அபேரத்ன தெரிவித்தார்.     


ராஜாங்கன பிரிவு 5 ஐச் சேர்ந்த நவோத்யா வித்தியாலயத்தின் தரம் 11 கற்கும் 16 வயதையுடைய மாணவர் ஒருவருக்கே இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இப்பிரததேசத்தில் முதலாவது அடையாளம் காணப்பட்டவரின் முன் வீட்டில் இம் மாணவர் வசிப்பவர் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.     

எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட 102 பேரின் மாதிரிகள் பீசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே இம்மாணவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஏனையவர்களுக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.      

இம்மாணவர் அனுராதபுர மெத்சிரி செவண வைத்திய சாலைக்கு சிகிட்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது,   ஏற்கனவே, இப்பாடசாலை மூடப்பட்டுள்ளதோடு, மாணவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இப்பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளை மூடுவது தொடர்பாக தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை எனவும் தம்புத்தேகம வலயக் கல்வி காரியாலய கல்விப் பணிப்பாளர் ஜீ.கே.ஆர்.எம்.கே. பண்டார தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!