கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை ஆரம்பம்..

அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் நாளை ஆரம்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


தரம் 5 ,10 ,11 ,12 மற்றும் 13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் வாரத்தின் 5 நாட்களும் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளில் சாதாரணமாக ஐந்து நாட்களும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதுடன் 200 மாணவர்களுக்கு அதிகமாக பாடசாலையில் ஒவ்வொரு வகுப்புகளாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது .

200 மாணவர்களுக்கு அதிகமான பாடசாலையில் முதலாம் மற்றும் ஐந்தாம் தர வகுப்புகளில் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமையும் இரண்டாம் மற்றும் ஐந்தாம் தர வகுப்புகளின் கல்வி நடவடிக்கையில் செவ்வாய்க்கிழமையும் மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு கல்வி நடவடிக்கைகள் புதன் கிழமையும் இடம்பெற உள்ளது.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரம் 4 மற்றும் தரம் 5 வகுப்புகளின் கல்வி நடவடிக்கை இடம்பெறவுள்ளது மேலும் 6 தரம் முதல் 13 தரம் வகுப்பு வரை கல்வி நடவடிக்கை திங்கட்கிழமையும் 7 தரம் முதல் 13 தரம் வகுப்புகளின் நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமையும் தரம் 8 முதல் 13 தரம் வரை கல்வி நடவடிக்கைகள் புதன் கிழமையும் இடம்பெற உள்ளது அத்துடன் வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் 9 தரம் முதல் 13 தரம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற உள்ளது.  6,7,8மற்றும் 9 வகுப்பு 7:30 முதல் 1.30 வரை யிலும் 10 முதல் 13 வரையில் 7.30 முதல் மாலை 3.30 வரையிலும் கல்வி நடவடிக்கை இடம்பெற உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது