Sunday, August 30, 2020

"துணை ஜனாதிபதி" பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம்


அதிகாரப்பூர்வமற்ற துணை ஜனாதிபதியாக கருதப்படும் பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவனர் பசில் ராஜபக்ஷவின் அடுத்த அரசியல் தளம் என்ன? என்பது குறித்து அண்மைய நாட்களாக அரசியல் அரங்கில் பேசப்பட்டுவருகிறது.

இந்த விடயம் தான் அரசியல் அரங்கில் கிட்டத்தட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான தடையை நீக்குவதற்கு விரைவான அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர அரசாங்கம் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சியில் உள்ள சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின்படி, இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது. இந்த நிபந்தனையே இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடிமகனான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதைத் தடுக்கிறது.

பிரபல செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் பசில் ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடத் தயாராக இல்லை என கூறியிருந்தார்.

19ஆவது திருத்தச்சட்டம் திருத்தப்பட்டதும் விசேட பதவியுடன் பசில் பாராளுமன்றத்தினுள் நுழையவுள்ளதாக அறியமுடிகிறது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!