Tuesday, August 18, 2020

ஹெரோயினுடன் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

அத்துருகிரிய பகுதியில் வைத்து அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆய்வக ஊழியர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடம் இருந்து 18 கிராம் 730 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று முன்தினம் (16) மாலை 5.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாத்தறை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!