அலுத்கம பொலிஸ் நிலையத்தில் சார்ஜன்ட் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியொன்று தவறுதலாக இயங்கியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த துப்பாக்கி பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ சிப்பாயின் தந்தை பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தந்தையை பார்ப்பதற்காக பொலிஸ் நிலையத்துக்கு குறித்த இராணுவ சிப்பாய் வந்த சந்தர்ப்பத்தில் அவரது இடதுகையில் துப்பாக்கி ரவை பாய்ந்துள்ளது.
பொலிஸ் சார்ஜன்ட் தனது கடமைகளுக்காக அதிகாரியிடம் இருந்து துப்பாக்கியை பெற்று சோதனை செய்த சந்தர்ப்பத்தில் தவறுதலாக துப்பாக்கி இயங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.