Thursday, August 20, 2020

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள மற்றுமொரு பிரமாண்ட காவியத்திரைப்படம்

'பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ், தொடர்ந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான ‘சாஹோ’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சுமாரன வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ‘பிரபாஸ் 20’ திரைப்படத்தில் நடிக்கின்றார். பூஜா ஹெக்டே இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

தொடர்ந்து, மகாநதி/நடிகையர் திலகம் திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும்  ‘பிரபாஸ் 21’ திரைப்படத்திலும் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘பிரபாஸ் 22’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓம் ராவத் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார்.

இது தீமையை வெற்றிகொள்ளும் நன்மையை பற்றிய ஒரு இந்திய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் என, திரைப்படகுழு உத்தியோகப்பபூர்வமாக அறிவித்துள்ளது.

‘பாகுபலி’ திரைப்படத்தில் மெகா வெற்றிக்கு பிறகு இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாஸ் தயாராகி வருகிறார்.

2021ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி 2022ஆம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!