எல்லா மொழிகளிலும் பல ஹிட் பாடல்கள் கொடுத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களாக ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்காக மக்கள் பிராத்தனை எல்லாம் செய்தார்கள்.
இந்த நிலையில் எஸ்.பி.பி. ஆபத்து நிலையை தாண்டிவிட்டதாகவும், கொரோனா சிகிச்சையில் அவருக்கு நெகட்டீவ் (Negative) வந்துள்ளதாகவும் செய்திகள் வந்தது.
கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி சில நோய் தொற்றுகளால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் நாட்கள் செல்ல செல்ல அவர் ஆபத்து நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிவிக்க மக்கள் மன வருத்தம் அடைந்ததோடு பிராத்தனை செய்தனர்.
தற்போது அவர் ஆபத்து நிலையை தாண்டிவிட்டதாக தகவல் வர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், தற்போது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை.
வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக எஸ்.பி.பியின் மகன் கூறியுள்ளார். இது ரசிகர்களை மன உளைச்சலுக்கு ஆக்கியுள்ளது.