இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு தமிழ் மொழி மூலமான உத்தியோகத்தர்கள் உடனடியாக சேர்த்துக் கொள்ளப்பட இருக்கின்றனர்.இதற்கான, அறிவித்தலை 2020 மார்ச் மாதம் இரண்டாம் திகதி அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.
சுமார் 800 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமிழ் மொழி மூலம் இணைத்துக்கொள்ளப்பட இருப்பதால் எமது சமூகத்தில் படித்த, தொழிலை எதிர்பார்த்து இருக்கும், இளைஞர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
மாதாந்தம் சுமார் 60000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய இந்தத் தொழிலுக்கு எமது சமூகத்தை சேர்ந்த (க/பொ/த) சாதாரண தரம் சித்தியடைந்த இளைஞர்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும். ஏற்கனவே சுமார் 200 தமிழ் மொழி மூல உத்தியோகத்தர்கள் எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வெளியேற இருக்கின்றார்கள்.
எனவே, எமது சமூகத்திற்கு தேவையான சேவைகளை மிகக்குறைந்த அளவிலான தற்போது இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் மாத்திரம் செய்துவிடமுடியாது. அதிலே பல சிரமங்களை நாம் தனிப்பட்ட ரீதியிலும், குழு ரீதியிலும் எதிர்கொள்கிறோம். எனவே, விண்ணப்பங்களை பொலீஸ் மின்னஞ்சலுக்கு செல்வதன் மூலம் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்க முடியும்.
Download Application : https://www.police.lk/index.php/item/96