ரணில் விக்ரமசிங்க ராஜினாமா

 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதன்படி கட்சியின் அடுத்த தலைவர் ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், தயா கமகே ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று (10)இடம்பெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின்போது இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். 
புதிய தலைவராக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை எடுக்கப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.