Sunday, August 9, 2020

இரண்டுமுறை ஜனாதிபதியாகவும் நான்காவது தடவையாக பிரதமராக தெரிவான மஹிந்த ராஜபக்ஷ

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் 28வது பிரதமராக  இன்று(09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இப்பதவி பிரமாணமானது முற்பகல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களனி ரஜமகா விகாரை புனித பூமியில் இடம்பெற்றது.


நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 முதல் 2015 வரை இரண்டு தடவைகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.

1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர் 1995ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை அமைச்சரவை அமைச்சராக குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளை நிறைவேற்றினர் .2004 ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி முதல் முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்ட அவர் 2018 அக்டோபர் மாதம் 26ஆம் திகதி இரண்டாவது முறையாகவும் 2019 நவம்பர் மாதம் 21ம் திகதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து இருந்தார்.

பத்துவருட காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சுமார் 30 வருட காலமாக நாட்டை ஆண்டுகொண்டிருந்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து நாட்டை துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச் சென்றவர் ஆவார். குருணாகல் மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 527 364 விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டதோடு இலங்கை பொதுத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்டு அதிக விருப்பு வாக்குகள் என வரலாற்றில் பதிவாக
காணப்படுகின்றது.

இரண்டுமுறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து பிரதமர் பதவிக்கு நான்காவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்ட முதலாமவர் என்றும் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் வரலாற்றில் இன்று இடம் பிடித்தார் ,மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐம்பது வருட அரசியல் வரலாற்றைக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!