இலங்கையில் இரண்டரை வருடங்களுக்கு போதுமான வாகனங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, நாட்டுக்கு தேவையற்ற பொருட்கள் இறக்குமதி மீதே, மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று (24) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வாகன இறக்குமதிதுறையானது அந்நிய செலாவணியை நாட்டுக்கு வெளியே கொண்டுச் செல்லும் துறையாகும் என்றார்.இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளவை தேவையற்றவை. உதாரணமாக 2019ஆம் ஆண்டு வரை 1,000- 2,000 டொலர் மில்லியன் செலவில் இலங்கைக்கு கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவ்வாறு 2015- 2019 வரை கொண்டு வரப்பட்ட கார்கள் இரண்டரை வருடத்துக்கு போதுமானதாக உள்ளதென்றார்.