Saturday, July 4, 2020

செவ்வாய் கிரகத்தின் நிலவை படம் பிடித்து அனுப்பிய மங்கள்யான் -இஸ்ரோ தகவல்

இஸ்ரோவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நிலவான போபோஸ் படம் பிடித்து அனுப்பியுள்ளது.செவ்வாய் கிரகத்தை ஆராய மங்கள்யான் விண்கலம் 2013ஆம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தியது பின்னர் 2014ஆம் ஆண்டு செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலம் நுழைந்தது அப்போது முதல் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சியில் மங்கள்யான் விண்கலம் ஈடுபட்டு வருகின்றது.

செவ்வாய் கிரகத்தின் மிக நெருக்கமான மற்றும் மிகப்பெரிய நிலவான போபோ சாவின் படத்தை மங்கள்யான் விண்கலத்தில் உள்ள மார்ஸ் கலர் கேமரா படம்பிடித்துள்ளது .கடந்த ஜூலை முதலாம் திகதி செவ்வாய்க்கு 7,200 கிலோ மீட்டர் தொலைவில் மற்றும் போபோஸ் அதிலிருந்து 4,200 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இந்த படத்தை எடுத்துள்ளது.

போபோஸ் நிலவு அதிகம் அறியப் படாத மர்ம மான நிலவு என இஸ்ரோ கூறுகின்றது ஏற்கனவே நிகழ்ந்த மோதல்களால் சேதமடைந்து ஸ்டிக்கி என்ற பெரிய பள்ளமும் மற்ற பெரிய பள்ளம் இருப்பது படங்களின் மூலம் காண முடிகிறது என்று இஸ்ரோ கூறியுள்ளது.

அமெரிக்க ரஷ்ய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே செவ்வாய்க்கு இதுவரையிலும் விண்கலங்களை வெற்றிகரமாக அனுப்பி இருந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்து முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது .

அமெரிக்காவும் ரஷ்யாவும் 1960 களிலேயே செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பியுள்ளனர் விண்வெளியில் வேகமாக முன்னேறும் சீன 2011-ல் செவ்வாயைஆராய செயற்கைக்கோளை அனுப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!