புதிய கடற்படை தளபதி நியமனம்
புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்

மேலும் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கையின் 24வது கடற்படை தளபதியாக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்

கடற்படையின் தளபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், மரியாதை நிமித்தம் அவர் ஜனாதிபதியை சந்தித்ததுடன், ஜனாதிபதிக்கு   நினைவுச் சின்னம் ஒன்றையும் அன்பளித்துள்ளார்.