கொழும்பு-13 ஜிந்துபிட்டியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு மேலும் இது சமூகப்பரவல் இல்லை யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேற்படி தொற்றுக்குள்ளான நபர் கப்பலில் பணிபுரிந்த நிலையில் இந்தியாவிலிருந்து வருகைதந்த மாலுமி ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து கொழும்பு ஜிந்துபிட்டி வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.