மூன்று அரசியல் பிரமுகர்களுக்கு மரண தண்டனை


முன்னாள் இரத்தினபுரி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் இந்த குற்றவாளிகளுக்கு இன்று (31)மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

கஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரப் பணி இடம்பெற்ற போது ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்சன சில்வா மற்றும் சப்ரகமுவ மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜெயக்கொடி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.