Tuesday, July 21, 2020

ஜனாதிபதியை கொலை செய்ய போவதாக எச்சரித்த கும்பல்



புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட குற்றவாளிகளான கொஸ்கொட தாரக,பொடி லெசி குழுவினர் ஜனாதிபதி,பாதுகாப்பு செயலாளர் உட்பட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன லாமாஹேவா உட்பட குற்றவிசாரணை திணைக்கள குழுவினர் சிறைச்சாலை தலைமையகத்திற்கு வந்து உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஆணையாளர்களான சந்தன ஏக்கநாயக்க,துசித்த உடுரவ மற்றும் சிறைச்சாலை புலனாய்வு பிரதான உதவி அத்தியட்சகர் பிரசாத் பிரேமதிலக்க ஆகியவர்களிடம் சில மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கொஸ்கொட தாரக, ஹிக்கடுவே பொடி லெசி,பிட்டிகல் கெவுமா உட்பட பாதாள உலகக் குழு தலைவர்கள் சிலர் தங்களை புஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு உணவு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை ஆராய்வதற்காக சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் கடந்த மாதம் 26ஆம் திகதி புஸ்ஸ பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு ஜனாதிபதி,பாதுகாப்பு செயலாளர் உட்பட அதிகாரிகள் தங்களுக்கு பெரிது இல்லை எனவும் ஆயுதங்கள் மற்றும் உறுப்பினர்களுடன் தங்கள் வலையமைப்பு தொடர்ந்து இயங்குவதாக கூறி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த தாரக,லெசி உட்பட குழுவினர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!